கேரளாவில் வானிலை குறித்து விடுக்கப்பட்ட பல கட்ட எச்சரிக்கை
வெள்ளம் பாதித்த கேரளாவில் வானிலை குறித்து விடுக்கப்பட்ட பல கட்ட எச்சரிக்கை குறித்து விரிவாக பார்ப்போம்.
ரெட் அலர்ட் - மிகவும் மோசமான வானிலை
ஆரஞ்ச் அலர்ட் - உடைமை, உயிர்களுக்கு சேதம் ஏற்படலாம்


ஆரஞ்ச் அலட்ர் என்பதும் மோசமான வானிலையை குறிக்கும். மின்சார தடை ,போக்குவரத்து,உள்ளிட்டவற்றை மக்கள் சந்திக்க நேரிடும்.உடைமை மற்றும் உயிர்களுக்கு சேதங்கள் ஏற்படலாம். வானிலை ஆய்வு மைய எச்சரிக்கைக்கு தகுந்தவாறு,மக்கள் திட்டமிட்டு தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதை குறிப்பதே ஆரஞ்ச் அலர்ட் ஆகும்.
மஞ்சள் அலர்ட் - இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம்

மஞ்சள் எச்சரிக்கை என்பது அடுத்த சில நாட்களுக்கு மோசமான வானிலை நீடிக்கும் என்பதை குறிக்கும்.பருவ நிலை மேலும் மோசமடையலாம் என்பதை எச்சரிக்கும் வகையில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
Next Story