கேரள மழை வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 67- ஆக உயர்வு

கேரள மாநில வரலாற்றில் முதல்முறையாக ஒரே நேரத்தில் 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது
கேரள மழை வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 67- ஆக உயர்வு
x
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த ஒருவாரமாக அந்த மாநிலத்தின்  வட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. கடந்த 2 நாட்களாக மத்திய மற்றும் தென் மாவட்டங்கள் என மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களிலும் கன கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள 35 அணைகளுக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்படுவதால், மாநிலமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 67 பேர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தெரியவில்லை என கூறப்படுகிறது. 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொடர் மழை காரணமாக, காசர்கோடு நீங்கலாக கேரள மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் மற்றும் அரசுத் துறை செயலாளரை மீட்புப் பணிகளை கண்காணிக்க அரசு நியமித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்