கடற்கரையில் உலா வரும் ஜெல்லி மீன்கள்
பதிவு : ஆகஸ்ட் 13, 2018, 10:57 AM
மும்பை கடற்கரையில் அதிகளவில் ஜெல்லி மீன்கள் காணப்படுகின்றன.
* மும்பை கடற்கரையில் அதிகளவில் ஜெல்லி மீன்கள் காணப்படுகின்றன. இதனால், அங்கு செல்ல, பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.

* ஆழ் கடலில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களில், ஜெல்லி மீன்கள், ஆயிரக்கணக்கில், வாழ்ந்து வருகின்றன. இதில், பெரும்பாலானவை கொடிய விஷத் தன்மை கொண்டவை என,  விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

* கொடிய விஷத்தன்மை மட்டுமின்றி, மனிதர்களைக் கொல்லக்கூடிய ஜெல்லி மீன் வகைகளும் உண்டு என்கின்றனர், 
ஆராய்ச்சியாளர்கள். 

* கடலின் ஆழமான உள்பகுதியில் வாழும் ஜெல்லி மீன்களானது கடற்கரை ஓரங்களில் அவ்வப்போது கரை ஒதுங்குகின்றன. இதேபோல், மும்பை கடற்கரையிலும் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கத் தொடங்கியுள்ளன. Juhu கடற்கரை, Aksa கடற்கரை, Girgaum Chowpatty மற்றும் Versova கடற்கரைகளில் ஜெல்லி மீன்கள் தென்பட்டதாக, கூறப்படுகிறது.  


* ''Blue bottle jelly fish'' என்ற வகை ஜெல்லி மீன்கள் தான் மும்பை, ஜுஹு கடற்கரையில் (Juhu beach) முகாமிட்டுள்ளன. இவ்வகை ஜெல்லி மீன்கள், Portuguese man-of-war என்று கூறப்படுகிறது. 

* நீண்ட வால்களைக் கொண்ட இந்த ஜெல்லி மீன்கள், hydrozoan குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மீன் வகைகள் அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் கடல்களில் காணப்படுகின்றன. 

* மும்பைக் கடற்கரையில், தற்போது அதிகளவில் ''Blue bottle jelly fish'' காணப்படுகின்றன. அட்டைப்பூச்சி போல் உடலில் ஒட்டிக் கொள்ளும் இந்த ஜெல்லி மீன்கள், ஒரு மணிநேரத்தும் மேலாக நமைச்சல் மற்றும் வலியை உடலில் ஏற்படுத்தி விடுகிறது. ஜெல்லி மீன்களால், 150  பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

* இந்நிலையில், ஜுஹு கடற்கரைக்குச் செல்லும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஜெல்லி மீன்களின் விஷம், கடலில் வாழும் மீன்களை மட்டுமே கொல்லக்கூடியது என்றும் மனிதர்களைக் கொல்லும் தன்மை இதற்கு இல்லை என்றும், சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

766 views

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1026 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2458 views

பிற செய்திகள்

ஆட்சி அமைக்க உரிமை கோரினார், மெகபூபா முப்தி : சட்டமன்றத்தை கலைத்தார், துணைநிலை ஆளுநர்

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவையை கலைத்து, அம்மாநில துணைநிலை ஆளுநர் சத்யபால் மாலிக் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

17 views

நாடு முழுவதும் ஒரு லட்சம் ஏ.டி.எம் மையம் மூடல்?

நாடு முழுவதும் ஒரு லட்சம் ஏடிஎம் மையங்கள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது.

1977 views

தனியார் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது - பயிற்சி விமானி உயிர் தப்பினார்

தெலங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டம் சங்கரபள்ளி மண்டலத்தில் இன்று காலை தனியார் பயிற்சி விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

123 views

மெகா கூட்டணிகளால் பாஜகவை வீழ்த்த முடியாது - ஹேமாமாலினி உறுதி

எவ்வளவு பேர் இணைந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது அவர்களால் மோடியை தொடக் கூட முடியாது - ஹேமாமாலினி

240 views

சாலையோரம் தூங்கியவர்கள் மீது கார் மோதியதில் 5 பேர் பலி, 9 பேர் படுகாயம்

அரியானா மாநிலத்தில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறிய விபத்தில் 5 பேர் பலியாகினர்.

215 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.