முழு கொள்ளளவை எட்டிய இடுக்கி அணை - கரையோர மக்கள் பீதி

26 ஆண்டுகளுக்குப்பின், 2 ஆயிரத்து 403 அடி கொண்ட இடுக்கி அணை, முழுமையாக நிரம்பி உள்ளது.
முழு கொள்ளளவை எட்டிய இடுக்கி அணை - கரையோர மக்கள் பீதி
x
கடந்த 50 ஆண்டு வரலாற்றில் இல்லாத வகையில், கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், 26 ஆண்டுகளுக்குப்பின், 2 ஆயிரத்து 403 அடி கொண்ட இடுக்கி அணை, முழுமையாக  நிரம்பி உள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி, 5 மதகுகளும் திறக்கப்பட்டன.


* "இடுக்கி மாவட்டத்தில் இருந்து தேங்கியுள்ள நீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது" : ஜீவன் குமார் - இடுக்கி மாவட்ட ஆட்சியர்

* "பொதுமக்களுக்கு எந்த ஒரு அச்ச உணர்வையும் ஏற்படுத்தாமல் நீரை வெளியேற்ற முயற்சித்து வருகிறோம்" : ஜீவன் குமார் - இடுக்கி மாவட்ட ஆட்சியர்

* "இடுக்கி அணையின் உபரி நீரை உரிய வழியில் வெளியேற்றி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவோம்" : ஜீவன் குமார் - இடுக்கி மாவட்ட ஆட்சியர்

கேரளாவிற்கு வந்தது தேசிய பேரிடர் மீட்புக்குழு - மீட்பு பணி தீவிரம்

கனமழை காரணமாக கேரளாவின் 22 அணைகளும் நிரம்பி விட்டன. 
இடுக்கி அணை திறக்கப்பட்டதால், இடுக்கி, செறுதோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர், அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகும் ஆபத்து உருவாகி உள்ளது. எனவே, கரையோர மக்கள் பீதியில் உள்ளனர். மற்றொருபக்கம், மீட்பு பணிக்காக, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்  கேரளா விரைந்துள்ளனர். ஒரே நேரத்தில் வான் வழி - தரை வழி - நீர் வழி என வீரர்கள், மீட்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்