தாஜ் மஹால் நுழைவு கட்டணம் உயர்வு

தாஜ் மஹால் மற்றும் இதர பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களுக்கான நுழைவு கட்டணத்தை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் உயர்த்தியுள்ளது.
தாஜ் மஹால் நுழைவு கட்டணம் உயர்வு
x
அதன்படி உள்நாட்டு பயணிகளின் நுழைவு கட்டணம் 40 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நுழைவு கட்டணம் ஆயிரத்து 100 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SAARC நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணமாக 540 ரூபாய் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 'பி' வகை நினைவு சின்னங்களை சென்று ரசிக்க உள்நாட்டு பயணிகளுக்கு 15 முதல் 25 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.கடந்த 2016-ஆம் ஆண்டு தாஜ் மஹால் மற்றும் இதர பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்களுக்கான நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நுழைவு கட்டணங்களை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்