முதியோர் கல்வி திட்டத்தில் படித்து ஆர்வமுடன் தேர்வெழுதிய 96 வயது மூதாட்டி

முதியோர் கல்வி திட்டத்தில் படித்து, 96 வயதில் ஆர்வமுடன் தேர்வெழுதிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
முதியோர் கல்வி திட்டத்தில் படித்து ஆர்வமுடன் தேர்வெழுதிய 96 வயது மூதாட்டி
x
கேரள மாநிலத்தில், முதியோர் கல்வித்திட்டத்தின் கீழ் படித்து வருவோருக்கு தேர்வுகள் நடைபெற்று வருகிறது.மாநிலம் முழுவதும் இந்த தேர்வை, சுமார் 40 ஆயிரம் முதியோர் எழுதியுள்ளனர். இதில் செப்பேடு, கனிச்சநல்லூர், அரசு தொடக்கப்பள்ளியில் கார்த்தியாயினி அம்மா என்ற 96 வயது மூதாட்டி தேர்வு எழுதினார். இவர் தான் இத்தேர்வை எழுதியவர்களில் அதிக வயது உடையவர்.முதியோருக்கான இந்த தேர்வுகளில், முதலில் புத்தகங்கள் படிக்கும் தேர்வு நடைபெற்றது. இதில், கார்த்தியாயினி அம்மாவுக்கு 30க்கு 30 முழு மதிப்பெண் கிடைத்தது.

எழுத்து தேர்வில், கோடிட்ட இடங்களை நிரப்புவது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அவை படித்த பாடங்களில் இருந்து வரவில்லை, தெரியாத கேள்விகள் கேட்கப்பட்டதாக கார்த்தியாயினி அம்மா வருத்தம் தெரிவித்தார்.96 வயதாகும் கார்த்தியாயினி அம்மா இதுவரை உடல் நலக்குறைவுக்காக, மருத்துவமனைக்கு சென்றதில்லை. கண் பார்வைக் குறைபாட்டுக்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள மட்டுமே மருத்துவமனை சென்றுள்ளார்.கார்த்தியாயினி அம்மா தினமும் 4 மணி நேரம் நடைபயிற்சி செய்கிறார். இளம் வயதுடையோர் நடப்பதை காட்டிலும் வேகமாக நடக்கிறார். இவரது ஆரோக்கியத்திற்கு இதுவே காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்