காவலர்களை தாக்கிய கும்பல்

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ராப்பூர் காவல் நிலைய காவலர்களை , ஒரு கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவலர்களை தாக்கிய கும்பல்
x
ராப்புரை சேர்ந்த ராஜேஷ் என்பவர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டு ராப்பூர் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதற்கு எதிர்த்த அவரது தாய் காவல் ஆய்வாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தனது பகுதியை சேர்ந்த சில நபர்களை கூட்டி வந்து காவல் நிலையத்திலிருந்த காவலர்களை தாக்கியுள்ளார். இதில் காவல் ஆய்வாளர் மற்றும் இரண்டிற்கு மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். தகவலறிந்து காவல் நிலையம் வந்த மாவட்ட கண்காணிப்பாளர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். முதல் கட்டமாக தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்