ஐ.டி.பி.ஐ. வங்கி பங்குகளை வாங்கும் எல்.ஐ.சி. முடிவு

கடனில் சிக்கித் தவிக்கும் ஐ.டி.பி.ஐ. வங்கியின் 51 சதவீத பங்குகளை வாங்கும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஐ.டி.பி.ஐ. வங்கி பங்குகளை வாங்கும் எல்.ஐ.சி. முடிவு
x
கடனில் சிக்கித் தவிக்கும் ஐ.டி.பி.ஐ. வங்கியின் 51 சதவீத பங்குகளை வாங்கும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் ஏற்கனவே எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ஏழரை சதவீத பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கியின் பங்கு மதிப்பு உயரும் போது 10 முதல் 13 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் எனவும், புதிதாக எல்.ஐ.சி. நிறுவனம் முதலீடு ஏதும் செய்யாது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்