"நான் 4 மாவட்டங்களின் முதலமைச்சரா...?" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆவேசம்

4 மாவட்டங்களுக்கு மட்டும் முதலமைச்சர் என்ற விமர்சனத்துக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பதிலளித்துள்ளார்.
நான் 4 மாவட்டங்களின் முதலமைச்சரா...? - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆவேசம்
x
வடக்கு கர்நாடகாவில் உள்ள கோப்பல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், முதலமைச்சர் குமாரசாமியை 'குடகு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மட்டுமே முதலமைச்சராக இருக்கிறார்' என புகார் கூறி வருகின்றார். வடக்கு கர்நாடகத்தை தனி மாநிலமாக அறிவிக்கவும் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த குமாரசாமி, தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் கர்நாடகாவின் ஒட்டு மொத்த பட்ஜெட்டான 2 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாயில் 514 கோடியை மட்டுமே 4 மாவட்டங்களுக்கு ஒதுக்கி இருப்பதாக தெரிவித்தார். 
தனது சகோதரரும் பொதுப்பணித் துறை அமைச்சருமான ரேவண்ணாவுடன் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை எனவும் அதுபோன்று பிரச்சினையை சிலர் உருவாக்கி வருவதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்