மூட நம்பிக்கைக்கு எதிராக போராட வேண்டும் - பிரதமர் மோடி

"மன் கி பாத்" எனும் நிகழ்ச்சி மூலம், வானொலியில் பேசிய பிரதமர் மோடி மூட நம்பிக்கைக்கு எதிராக நம்பிக்கையுடன் போராட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மூட நம்பிக்கைக்கு எதிராக போராட வேண்டும் - பிரதமர் மோடி
x
"மன் கி பாத்" எனும் நிகழ்ச்சி மூலம், வானொலியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் சில பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ள செய்தி மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். சில நேரங்களில் கனமழை பெரிய தொந்தரவுகளை கொடுப்பதாகக் கூறிய அவர்,இயற்கையுடன்  நாம் முரண்படுவதால் இது நடக்கிறது என்றார்.இயற்கை, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றும் மோடி தெரிவித்தார்.கல்லூரி மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்றும், அவர்களது ஆர்வம் எப்போதும் குறையக் கூடாது என்றும் மோடி கூறினார்.சமூக கொடுமைகளுக்கு எதிராக, துறவிகளின் போதனைகள் நம்மை ஊக்கப்படுத்தும் என்ற மோடி, மூட நம்பிக்கைக்கு எதிராக நம்பிக்கையுடன் போராட வேண்டும் என அறிவுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்