கர்ப்பிணி ஆட்டை பலாத்காரம் செய்த கும்பல்

அரியானாவில், கர்ப்பிணியாக இருந்த ஆட்டை 8 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்ப்பிணி ஆட்டை பலாத்காரம் செய்த கும்பல்
x
அரியானாவில், கர்ப்பிணியாக இருந்த ஆட்டை 8 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, அங்குள்ள மேவாட்  மாவட்டத்தை சேர்ந்த விவசாயி அஸ்லு என்பவர், போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 25ம் தேதி நள்ளிரவில் தனது ஆட்டை 8 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து கொன்றதாக கூறியுள்ளார். கொல்லப்பட்ட ஆடு கர்ப்பமாக இருந்ததாகவும் அதன் உரிமையாளர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆடு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு 'பீட்டா' உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்