"முயன்றால் முடியும்" - ஐ.எஃப்.எஸ். ஆன மாற்றுத்திறனாளி

நான்கு ஆண்டுகள் முயற்சிக்குப் பின்னர், பார்வைத் திறன் அற்ற இளைஞர்,யு.பி.எஸ்.சி.தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
முயன்றால் முடியும் - ஐ.எஃப்.எஸ். ஆன மாற்றுத்திறனாளி
x
மஹாராஷ்டிரா மாநிலம், புனேவின் புறநகரான பீட் பகுதியைச் சேர்ந்த, 25 வயதான ஜெயந்த் மன்கலே, பிறக்கும்போதே, 75 சதவீதம் பார்வைக் குறைபாட்டுடன் பிறந்தார். இவரின் தந்தை, குடிநீர் குழாய் பழுதுநீர்க்கும் பணி செய்து வந்தார். ஜெயந்த் பள்ளிப் படிப்பு படிக்கும்போது, அவரின் தந்தை காலமாகி விட்டார்.மிகவும் ஏழ்மையான நிலையில் குடும்பத்தை நடத்திவந்த ஜெயந்த்தின் தாயும், சகோதரியும் வேலைக்குச் சென்று, அவர் படிப்பதற்கு, தேவையான உதவிகளைச் செய்தனர். சிலநேரங்களில் வீட்டில் ஊறுகாய், மசாலா பொருட்கள், உணவுப் பொருட்கள் தயாரித்து, விற்பனை செய்து வருவாய் ஈட்டினர்.

பள்ளிப்படிப்பை பிரெய்லி முறையில் சிறப்பாக முடித்துத் தேறிய ஜெயந்த், அதன் பின்னர் புனேயில் உள்ள அமிர்தவாஹினி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து, மெக்கானிக்கல் பொறியியல் படிப்பை முடித்தார்.அதன்பின்னர், மத்திய அரசின் யு.பி.எஸ்.சி. எழுதிய ஜெயந்த், 4 முறை தேர்வு எழுதியும் தோல்வி அடைந்தார். இந்நிலையில், 5-வது முறையாக, கடந்த ஆண்டு நடந்த தேர்வில் வெற்றி பெற்று, தேசிய அளவில் 923 இடத்தை பெற்றார். இவரது கனவு, இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றவேண்டும் என்பதுதான்.

Next Story

மேலும் செய்திகள்