புதிய நூறு நோட்டில் இடம் பெற்றுள்ள ராணி கிணறு எங்கிருக்கிறது..?

புதிய நூறு நோட்டில் இடம் பெற்றுள்ள ராணி கிணறு எங்கிருக்கிறது..? இதன் சிறப்பென்ன? என்பதை பார்க்கலாம்.
புதிய நூறு நோட்டில் இடம் பெற்றுள்ள ராணி கிணறு எங்கிருக்கிறது..?
x
காதலியின் நினைவுக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மகாலை போல, சோலங்கி வம்சத்து அரசனான பீமதேவரின் நினைவாக அவரது மனைவி உதயமதி, 1050-ம் ஆண்டு இந்தப் படிக்கிணறை கட்டினார். கணவனின் நினைவுக்காக மனைவி கட்டிய இந்த கிணற்றில் பல சுவாரசியமான கதைகள் புதைந்திருக்கின்றன. 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, வட இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடியது. தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்காக ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் ஆயிரக்கணக்கில் படிக்கிணறுகளை கட்டினார்கள். 

அப்படி கிணறுகள் அதிகமாக உருவாக்கப்பட்ட கால கட்டத்தில் தான் உதய மதி, கணவரின் நினைவாக இந்தக் கோவில் கிணற்றையும் உருவாக்கி உள்ளார். இது கிணறு வடிவில் அமைந்திருக்கும் நினைவு கோவில். 

 இந்த நினைவுக் கோவிலை தரைமட்டத்தில் இருந்து கீழ்நோக்கிச் செல்லும் வகையில் அமைத்ததற்கும் ஒரு காரணம் கூறப்படுகிறது. அதாவது, ஆழம் என்பது நமது மனதிற்குள் இறங்கும் உணர்வை அளிக்கிறது. அதனால் கணவனின் நினைவுகளை ஆழ்மனதிற்கு இறங்கிப் பார்க்கும் வகையில், இந்த இடத்தை அவரது மனைவி வடிவமைத்திருக்கிறார். திரும்பும் திசைகளில் எல்லாம், பார்க்கும் சுவர்களில், தூண்களில் எல்லாம் இறைவனின் சிற்பங்களே காட்சியளிக்கின்றன. 

 சோலங்கி அரசை கைப்பற்றிய அலாவுதீன் கில்ஜி , குஜராத்தில் இருந்த எல்லாக் கோட்டைகளையும், கோவில்களையும் இடித்து அழித்தார். அதில், 'ராணி கி வாவ்' கிணறு கோவிலும் ஒன்று. இதை இடிக்க பெரிதாக சிரம படவில்லை. அருகில் இருந்த கட்டிடங்களையும், மதில் சுவர்களையும் இடித்து கிணறை மூடிவிட்டார். 

1958ம் ஆண்டு வரை மண் மூடிக்கிடந்த இந்த பொக்கி‌ஷக் கிணறை, 1972-ம் ஆண்டு, அகழ்வாராய்ச்சி மூலமாக வெளிக்கொண்டு வந்தனர். 1984ம் ஆண்டில் இருந்து, பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டது.

இந்த இடம், இந்தியாவின் கலைப் பொக்கி‌ஷமாகவும், ஆன்மிக ஸ்தலமாகவும் விளங்குகிறது. கலைப் பார்வையில் பிரமிப்பாகவும், ஆன்மிகப் பார்வையில் பக்தி மனம் கமழும் வகையிலும் இந்த அதிசய கிணறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்