எமன் வேடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் - போக்குவரத்து துறையின் நூதன முயற்சி

விதிகளை மீறுவோரை அச்சுறுத்தும் எமதர்ம ராஜா
எமன் வேடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் - போக்குவரத்து துறையின் நூதன முயற்சி
x
கர்நாடகாவில் இந்தாண்டு ஜூன் மாத இறுதி வரை 2 ஆயிரத்து 336 சாலை விபத்துக்கள் நேர்ந்துள்ளதாகவும், அதில் 330 பேர் உயிரிழந்துள்ளதாகவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த சாலைவிபத்துக்களை தடுப்பதற்காக கர்நாடக அரசும் போக்குவரத்துதுறையும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.தலைகவசங்களின் அவசியம் குறித்து பல விதங்களில் மக்களிடம் எடுத்துரைத்தும் பலனில்லாததால், தற்போது வாகன ஓட்டிகளை  வழிக்கு கொண்டுவர வித்தியாசமான  முயற்சியில் இறங்கியுள்ளது அம்மாநில போக்குவரத்து துறை. தலையில் கிரீடம், கையில் பாசக்கயிறுடன் சாலைகளில்    எமதர்மன்களை உலவ விட்டிருக்கிறார்கள்...    தலைக்கவசம் அணியாமல் அல்லது செல்போன் பயன்படுத்திகொண்டு வரும் நபர்களை போலீசார் மடக்க, இந்த குழு அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறது.. எமதர்ம வேடமிட்டவர்கள், சிலரது கழுத்தில் பாசக்கயிற்றை வீசியும் பயமுறுத்துவர்.. சிலரை துரத்திச்செல்வர். தமிழக போக்குவரத்து காவல்துறை சென்னை திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட போன்ற இடங்களில், இந்த முயற்சியை கடந்த மார்ச் மாதமே மேற்கொண்டுவிட்டனர். பொதுவாக சாலையில் விழிப்புணர்வு செய்வதை பொதுமக்கள் கருத்தில் கொள்வதில்லை.நாடக நடிகர்களை கொண்டு இவ்வாறு வித்தியாசமாக விழிப்புணர்வு செய்வது மக்கள் மனதில் எளிதாக பதியும் என்கின்றனர் போக்குவரத்து காவலர்கள். உடனடி அபராதம், உரிமம் ரத்து, வாகனங்கள் அபகரிப்பு,  என பல முயற்சிகளை கண்டுகொள்ளாத  சில வாகன ஓட்டிகள்,  உயிர் பயம் காட்டினாலாவது சாலை விதிகளை கடைபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இந்த வினோத முயற்சியை மேற்கொண்டுள்ளது கர்நாடக அரசு.

Next Story

மேலும் செய்திகள்