வரும் 18ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்-18 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரம்

தமிழகம் எதிர்க்கும் அணை பாதுகாப்பு மசோதாவை வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
வரும் 18ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்-18 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரம்
x
தமிழகம் எதிர்க்கும் அணை பாதுகாப்பு மசோதாவை வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. முக்கியமாக தமிழகம் பலமாக எதிர்க்கும் அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதை தவிர,  பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவோரின் தண்டனையை அதிகப்படுத்துவது, தனியார் நிதி நிறுவன முறைகேடுகளை தடுப்பது, மனித உரிமை ஆணையத்தின் அதிகாரத்தை அதிகப்படுத்துவது,  தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் என்பன உள்பட 18 மசோதாக்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அணை பாதுகாப்பு மசோதாவிற்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்