தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். அனுப்பிய பயங்கரவாதியை கைது செய்தது என்.ஐ.ஏ.

கடந்தாண்டு இந்தியாவில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் அனுப்பப்பட்ட பயங்கரவாதியை கைது செய்து ஆப்கனுக்கு இந்தியா நாடு கடத்திய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். அனுப்பிய பயங்கரவாதியை கைது செய்தது என்.ஐ.ஏ.
x
பயங்கரவாதியை கைது செய்த என்.ஐ.ஏ.

உலகம் முழுவதும் தாக்குதல் நடத்த கடந்தாண்டு ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பு 12 பயங்கரவாதிகளை பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. அப்படி அனுப்பப்பட்ட பயங்கரவாதியில் ஒருவர், டெல்லியில் உள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார். லாஜ்பத் நகரில் அவர் தங்கியிருந்த நிலையில், தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வந்திருப்பதை அறிந்து அவரை தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து கண்காணித்துள்ளது, இந்திய புலனாய்வு அமைப்பு. இந்த தகவலை உறுதி செய்த பின்னர், இந்திய புலனாய்வு அமைப்பு அதிகாரி ஒருவரை அவருடன் நெருங்கி பழகச் செய்து, அந்த பயங்கரவாதியின் நம்பிக்கையை பெற வைத்துள்ளனர். ஒருகட்டத்தில் அந்த பயங்கரவாதி திட்டத்தை நிறைவேற்ற வெடிமருந்து கேட்டுள்ளார். அவருக்கு போலியான வெடிமருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பயங்கரவாதியை கைது செய்து,  இந்திய புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில் இந்தியா உள்பட உலகில் 12 இடங்களுக்கு 12 பயங்கரவாதிகளை தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு அனுப்பியது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்தாண்டு இறுதியில் அந்த பயங்கரவாதி ஆப்கனுக்கு நாடு கடத்தப்பட்டார். 

தற்போது, அவரை ஆப்கனில் உள்ள அமெரிக்க விசாரணை முகாமில் வைத்து அமெரிக்க பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பயங்கரவாதியை இனம் கண்டு, இந்தியா நாடு கடத்தியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்