திருடனை விரட்டி பிடித்த காவலருக்கு இன்ப அதிர்ச்சி - தேனிலவு செலவை ஏற்க காவல்துறை முடிவு

பெங்களூருவில் நடந்து சென்றவரிடம் செல்போனை பறித்துச் சென்றவரை விரட்டிப் பிடித்த காவலருக்கு, கர்நாடக காவல்துறை அளித்துள்ள பரிசு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருடனை விரட்டி பிடித்த காவலருக்கு இன்ப அதிர்ச்சி - தேனிலவு செலவை ஏற்க காவல்துறை முடிவு
x
திருடனை விரட்டி பிடித்த காவலருக்கு இன்ப அதிர்ச்சி

பெங்களூரு மாநகரின் பெல்லந்தூர் பகுதியைச் சேர்ந்த அனுமந்தா என்பவர் கடந்த ஐந்தாம் தேதி இரவு பணிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த செல்போனை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் திருடிச் சென்றனர். 
அனுமந்தா சப்தத்தை கேட்ட அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த மர்மநபர்களை, ரோந்து பணியில் இருந்த காவலர் வெங்கடேஷ் நான்கு கிலோமீட்டர் தூரத்துக்கு விரட்டிச் சென்று வழிப்பறி கொள்ளையர்களில் ஒருவனை பிடித்தார். மற்றொரு கொள்ளையன் தப்பிய நிலையில், பிடிபட்ட அருண், செயின் பறிப்பு திருடன் என்பதும், அவன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், மக்களிடம் இருந்தும், போலீசாரிடம் இருந்தும் காவலர் வெங்கடேசுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து காவல் துணை ஆணையர் அப்துல் அஹாத், காவலர் வெங்கடேசை அழைத்துப் பாராட்டியதுடன் 10 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கியுள்ளார். வெகு விரைவில் காவலர் வெங்கடேஷூக்கு திருமணம் நடைபெற உள்ளதை அறிந்து விடுமுறை வழங்கியதுடன் , தேனிலவு செல்லும் செலவையும் கர்நாடக காவல்துறை ஏற்கும் என் தெரிவித்துள்ளார். திருடனை விரட்டிப் பிடித்த காவலருக்கு கர்நாடக காவல்துறை தந்துள்ள இந்த இன்ப அதிர்ச்சி, சக காவலர்களிடம் மட்டுமல்லாது, அம்மாநில மக்களிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்