மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன
மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது
x
தானே, ராய்காட், பால்கார், பைகுளா, வதாலா, வசாய் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 அடிக்கு மேல் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தெருக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகனங்கள் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன.ரயில் நிலையங்களை தண்ணீர் சூழ்ந்திருப்பதால், நலசோபாரா ரயில் நிலையம் உட்பட பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது.தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் மழை தொடர்வதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் 13-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்