தைவான் பெயர் மாற்றம் - வெளியுறவுத்துறை விளக்கம்
பதிவு : ஜூலை 06, 2018, 02:55 PM
ஏர் இந்தியா இணையதளத்தில் தைவானை 'சீன தைபே' என பெயர் மாற்றம் செய்தது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
சீன விமான நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, ஏர் இந்தியா இணையதளத்தில் தைவானை 'சீன தைபே' என பெயர் மாற்றம் செய்தது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. சர்வதேச நடைமுறைகள் மற்றும் 1949 ஆம் ஆண்டில் இருந்து தைவான் தொடர்பாக இந்தியா கடைப்பிடித்து வரும் நடைமுறை அடிப்படையிலேயே இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 
தைவானை தனி நாடாக கருதக் கூடாது என்றும், இனி விமான நிறுவனங்கள் தங்களது இணைய தளத்தில் சீன தைபை என்று தான் குறிப்பிட வேண்டும் என சீன விமானத் துறை எழுதிய கடிதத்தை தொடர்ந்து, ஏர் இந்தியா இணையதளத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.