ரயில் பயணத்தின் போது, அசல் ஆதாரங்களை காட்ட வேண்டிய அவசியம் இல்லை

ரயில்களில் பயணம் செய்யும் போது, அசல் ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயில் பயணத்தின் போது, அசல் ஆதாரங்களை காட்ட வேண்டிய அவசியம் இல்லை
x
ரயில்களில் பயணம் செய்யும் போது, பயணச்சீட்டுகளை சரி பார்க்க, அசல் ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமத்தை காட்ட வேண்டி இருக்கிறது. இந்நிலையில்,  இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆதார், ஓட்டுனர் உரிமம் போன்ற ஆதாரங்களை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைக்க மத்திய அரசு தரப்பில் DIGI LOCKER என்ற வசதி கொண்டு வரப்பட்டது.  இதில், ஒருவர் தனது ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை என அனைத்து ஆதாரங்களையும் டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்க முடியும்.    ரயில் பயணத்தின் போது, DIGI LOCKERல் இருக்கும் ஆதாரங்களை காட்டினால் போதுமானது என்றும் அசல் ஆதாரங்களை காட்ட வேண்டியது இல்லை என்றும் இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்