ஜூன் மாதம் 1 கார் மட்டுமே தயாரித்த டாடா நிறுவனம்

மே மாதம் இந்தியா முழுவதும் மொத்தம் 3 நானோ கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.
ஜூன் மாதம் 1 கார் மட்டுமே தயாரித்த டாடா நிறுவனம்
x
உலகின் விலை குறைந்த கார் என்று வெளியிடப்பட்ட டாடா நானோவின், விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது. டாடா நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் சைரஸ் மிஸ்திரி இருந்த போது டாடா நானோ தயாரிப்பை நிறுத்தி கொள்ளலாம், நானோ கார் லாபம் தரவில்லை என்று அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், மே மாதம் இந்தியா முழுவதும் மொத்தம் 3 நானோ கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.  இதனால்,  ஜூன் மாதம் ஒரே ஒரு நானோ காரை மட்டுமே டாடா நிறுவனம் தயாரித்துள்ளது. கூடிய விரைவில், இதன் உற்பத்தியை டாடா நிறுவனம் நிறுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்