விரைவில் வீடுகளுக்கான ஜியோ இணைய சேவை - ஆகஸ்ட் 15 முதல் பதிவு செய்து கொள்ளலாம்
வீடுகளுக்கு வழங்கப்படும் FIBER இணைய சேவை திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. அதில், வீடுகளுக்கு FIBER இணைய சேவை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 2 ஆயிரத்து 999 ரூபாய் மதிப்பில், ஜியோ போன் 2 என்ற புதிய செல்போனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோ சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், பொருட்கள் மற்றும் சேவை வரியாக கடந்த ஆண்டு 42 ஆயிரத்து 553 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டங்களை பெற, வரும் ஆகஸ்ட் 15 முதல் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story