பங்களாவில் கள்ள நோட்டுகள் அச்சடித்ததாக மலையாள சின்னத்திரை நடிகை கைது

கேரளாவில் உள்ள பங்களாவில் கள்ள நோட்டுகள் அச்சடித்ததாக பிரபல மலையாள நடிகை, அவரது தாய் மற்றும் தங்கையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பங்களாவில் கள்ள நோட்டுகள் அச்சடித்ததாக மலையாள சின்னத்திரை நடிகை கைது
x
கேரளாவில் இடுக்கி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கள்ள நோட்டுகளுடன் வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொல்லம் நகரில் உள்ள பங்களாவில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து பங்களாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 57 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கள்ள நோட்டுகளை அச்சடித்த ரமாதேவி, அவரது மகள்களான பிரபல மலையாள சின்னத்திரை நடிகை சூரியா சசிகுமார் மற்றும் ஸ்ருதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கள்ள நோட்டு அச்சடித்ததில் மலையாள சின்னத்திரை நடிகை கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்