வாழை கன்றுகளை விற்பதில்லை - விவசாயிகள் முடிவு

கடலூர் மாவட்டத்தில், வாழை தார்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சோகமடைந்துள்ளனர்.
வாழை கன்றுகளை விற்பதில்லை - விவசாயிகள் முடிவு
x
கடலூர் மாவட்டத்தில் ராமாபுரம், சமட்டிக்குப்பம், பட்டாம்பாக்கம் உள்ளிட்ட 40க்கும் அதிகமான கிராம மக்கள் வாழை பயிரிடுவதை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். கடந்த மாதம் வீசிய சூறைக்காற்றால், பல வாழை மரங்கள் சேதமடைந்து விவசாயிகளுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தின. மிகவும் சிரமப்பட்டு வாழை குலை தள்ளும் நிலைக்கு, விவசாயிகள் பராமரித்து வந்தனர். ஆனால், தற்போது வாழை தார்கள் வெறும் 20 ரூபாய்க்கு விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. விலை அதிகரிக்க விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், வாழை தார்கள், அழுக தொடங்கியுள்ளன. இதனால், வேதனை அடைந்துள்ள விவசாயிகள், இனி கடலூர் மாவட்ட வாழைக் கன்றுகளை மற்ற மாவட்டங்களுக்கு விற்பதில்லை என முடிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்