குப்பை கிடங்கை புல்வெளியாக மாற்றிய நெல்லை மக்கள்

குப்பை கிடங்கை கூட புல்வெளியாக மாற்றி, பார்வையாளர்களின் பாராட்டை பெற முடியும் என நிரூபித்து காட்டியுள்ளது நெல்லை மாநகராட்சி நிர்வாகம்.
குப்பை கிடங்கை புல்வெளியாக மாற்றிய நெல்லை மக்கள்
x
நெல்லை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 160 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த குப்பைகளை சேகரித்து வைப்பதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வந்தன. அத்துடன் அவ்வப்போது குப்பை கிடங்கில் ஏற்படும் தீ விபத்து, சுற்றியுள்ள மக்களை கடுமையாக பாதித்தது. தீயை அணைக்கும் முயற்சியில், மாநகராட்சிக்கும் நெருக்கடி நிலை தொடர்ந்து வந்தது. இதற்கு மாற்று வழியை யோசித்த மாவட்ட நிர்வாகம், சேமிக்கப்படும் குப்பைகளை குவித்து இயற்கை புல்வெளி அமைத்து, மலையை உருவாக்க முடிவு செய்தது.  அதன்படி, தற்போது எட்டரை கோடி ரூபாய் செலவில் 90 அடி உயரத்திற்கு ரம்மியமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது இந்த பசுமை மலை. தற்போது மலை மீது ஏறி சுற்றி பார்க்கவும், புகைப்படம் எடுக்கவும் மக்கள் குவிந்து வருவதால், சுற்றுலா பகுதி போல காட்சியளிக்கிறது பசுமை மலை. அத்துடன் குப்பைகள் ஒரே பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால், இடப்பற்றாக்குறை குறைந்துள்ளது. மாநகராட்சியின் இந்த புது முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்