'நிக்கா ஹலாலா' முறைக்கு எதிராக மனு - உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல்

இஸ்லாமியர்களால் பின்பற்றப்படும், 'நிக்கா ஹலாலா' முறையை ரத்து செய்ய வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
நிக்கா ஹலாலா முறைக்கு எதிராக மனு - உச்ச நீதிமன்றம் விசாரிக்க  ஒப்புதல்
x
'நிக்கா ஹலாலா' முறைக்கு எதிராக மனு - உச்ச நீதிமன்றம் விசாரிக்க  ஒப்புதல்

இஸ்லாத்தில், மூன்று முறை 'தலாக்' கூறி, மனைவியை விவாகரத்து செய்து விட்டால், அந்த மனைவி தன் பழைய கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ சில நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. நிக்கா ஹலாலா என குறிப்பிடப்படும் இந்த முறையில், விவாகரத்து பெற்ற பெண், வேறொரு நபரை திருமணம் செய்து, அவரிடம் விவாகரத்து பெற்றால் மட்டுமே, பழைய கணவரை மீண்டும் திருமணம் செய்து வாழ முடியும். அப்படி இல்லாத பட்சத்தில் அந்த பெண்ணின் 2-வது கணவர் இறந்தால் தான்அவரால் தன் பழைய கணவரை மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடியும். 

நிக்கா ஹலாலா முறையை எதிர்த்து, டெல்லியைச் சேர்ந்த சமீனா பேகம், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை, விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, நிக்கா ஹலாலா முறைக்கு எதிரான மனு,  5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.Next Story

மேலும் செய்திகள்