கூடங்குளம் அணு உலையில் அணுக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான கிடங்கு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

2022 ஆம் ஆண்டு, ஏப்ரல் 30-க்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடங்குளம் அணு உலையில் அணுக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான கிடங்கு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
x
5 ஆண்டிற்குள் கூடங்குளம் அணு உலையில் அணுக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான கிடங்கு அமைக்க வேண்டும் என கடந்த 2013 ஆம் ஆண்டு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கிடங்கை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் மத்திய அரசுக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பி்ல் ஆஜரான வழக்கறிஞர், கிடங்கு அமைக்க  கால அவகாசம் கோரினார். இதனையடுத்து வரும் 2022, ஏப்ரல் 30ம் தேதி வரை கிடங்கு அமைக்க இறுதி கால அவகாசமாக வழங்கிய தலைமை நீதிபதி அமர்வு, அணுக்கழிவு கிடங்கு செயல்பாட்டுக்கு வரும் வரை, அணுஉலையை நிறுத்தி வைக்க கோரி, புதிய மனுத்தாக்கல் செய்ய பூவுலகின் நண்பர்கள் அமைப்புக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்