ஆப்கனில் தீவிரவாதிகள் தாக்குதல்- மோடி கண்டனம்

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆப்கனில் தீவிரவாதிகள் தாக்குதல்- மோடி கண்டனம்
x
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சமூகவலை தள பக்கத்தில் அவர் வெளியிட்ட தகவலில், தீவிரவாதிகள் அந்நாட்டின் பன்முகத்தன்மையின் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாகக் கூறியுள்ளார். கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார். இந்தத் துயரமான நேரத்தில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு இந்தியா உதவ தயாராக உள்ளதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்