கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி

வேலூர் மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார்.
கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
x
வேலூர் மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். குடியாத்தம் அடுத்த காத்தாடிகுப்பம் கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் அவர் தவறி விழுந்து விட்டார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட தேடுதலுக்கு பின் கிணற்றிலிருந்து சுரேந்தரின் சடலத்தை மீட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்