காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் : டெல்லியில் நாளை நடைபெறுகிறது

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது.
காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் : டெல்லியில் நாளை நடைபெறுகிறது
x
உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்பட 4 மாநிலங்கள் இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இதில் தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தமிழக பிரநிதி செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதேபோல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பிரநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்