"தற்போதைய ஜிஎஸ்டி என்பது வரியல்ல, மிருகம்" - முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

ஜிஎஸ்டி என்ற பெயரில் தற்போது இருப்பது ஒரு மிருகம் என்றும், அது வரி அல்ல என்றும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜிஎஸ்டி என்பது வரியல்ல,  மிருகம் - முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து
x
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நிதி அமைச்சர்  ப.சிதம்பரம்,  தொழில் செய்பவர்கள், வர்த்தகர்கள் மற்றும் மக்களிடையே ஜிஎஸ்டி என்பது கெட்ட வார்த்தையாக மாறியுள்ளது என்று தெரிவித்தார்.  ஜிஎஸ்டி குறித்து தலைமை பொருளாதார ஆலோசகரின் கருத்துக்கள் பெரிதாக எடுத்துகொள்ளப்படாமல், நிறைய தவறுகளுடன் ஜிஎஸ்டி அமல் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, ஜிஎஸ்டி என்ற பெயரில் தற்போது இருப்பது ஒரு வித்தியாசமான மிருகம் என்றும் அது வரி அல்ல என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கூடிய விரைவில், ஜிஎஸ்டி வரி விகிதம், படிப்படியாக குறைக்கப்பட்டு,  ஒரு வரி விகிதமாக மாறினால் மட்டுமே, இந்த வரி ஜிஎஸ்டியாக இருக்கும் என்றும் பெட்ரோல், டீசல், மின்சார கட்டணத்தை  ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.   


Next Story

மேலும் செய்திகள்