சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.2.83 காசுகள் உயர்வு
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு
x
எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மானியத்துடன் வழங்கப்படும் சிலிண்டர் விலையை 2 ரூபாய் 83 காசுகள் உயர்த்தி, 484 ரூபாய் 67 காசுகளாகவும், மானியம் அல்லாத சமையல் சிலிண்டர் விலையை 58 ரூபாய் அதிகரித்து 770 ரூபாய் 50 காசுகளாகவும் நிர்ணயித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு போன்றவை காரணமாக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.


Next Story

மேலும் செய்திகள்