சென்னையில் விற்பனைக்கு வந்த "தூய்மையான" காற்று - ஒரு கேன் விலை ரூ.650....

சென்னையில் ஆக்சிஜன் கேன்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. தூய காற்று என்ற பெயரில் விற்கப்படும் ஆக்சிஜன் கேன்கள் சென்னைவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் விற்பனைக்கு வந்த தூய்மையான காற்று - ஒரு கேன் விலை ரூ.650....
x
சென்னை தியாகராய நகரில் நாம் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், சில நிமிடங்கள் திகைப்பையும் உண்டாக்கியது. சென்னையில் உள்ள பூங்கா ஒன்றின் அருகே, விற்பனைக்கு வந்துள்ள ஆக்சிஜன் கேன்கள்தான் இவை. காற்றைக் கூட காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை வந்துவிட்டது என்பது ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி. டெல்லி, மும்பை போன்ற, பெரு நகரங்களில் ஆக்சிஜன் கேன்கள் ஏற்கெனவே விற்பனைக்கு வந்துவிட்டன. அதேபோல், சில ஆன் லைன் விற்பனை தளங்களிலும், கிடைக்கின்றன.ஆனால், தற்போது பரவலாக வணிக ரீதியில் தூய காற்று அடைக்கப்பட்ட குடுவைகள் சென்னையில் விற்பனைக்கு வந்துவிட்டதை கண்கூடாகக் காணமுடிகிறது.

உலகின் பல நாடுகளில் காற்று மாசு அதிகரித்து சுவாசிக்க தகுந்ததாக இல்லாத சூழல் உருவாகி விட்டது. இந்தியாவில் டெல்லிக்கு அடுத்தபடியாக, சென்னையில் காற்று மாசுபாடு குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்துவிட்டது. இந்த நிலையில், சுத்தமான காற்று என்று கூறி, சென்னையில் உள்ள பூங்கா ஒன்றின் அருகே,ஆக்சிஜன் கேன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கேன் ஒன்றின் விலை 650 ரூபாய். காற்று மாசுபாடு அதிகமுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் இதனைப் பயன்படுத்தலாம் என்கின்றனர். காலை, மாலை வேளைகளில் பூங்காவுக்கு நடைபயிற்சி வருபவர்கள், இவற்றை வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர். சுற்றுசூழல் மாசுபாடு நாளுக்கு நாள் பெருகிவரும் சூழலில், காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலை வந்திருப்பது எதிர்காலம் பற்றிய அச்சத்தினை உண்டாக்கியிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்