சொட்டு நீர் பாசனம் மூலம் குறுவை சாகுபடி - தண்ணீர் பற்றாக்குறைக்கு மாற்று வழி கண்டறிந்த விவசாயி

திருவாரூரில் சொட்டு நீர் பாசனம் மூலம் குறுவை சாகுபடி செய்து வரும் விவசாயி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
சொட்டு நீர் பாசனம் மூலம் குறுவை சாகுபடி - தண்ணீர் பற்றாக்குறைக்கு மாற்று வழி கண்டறிந்த விவசாயி
x
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூங்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரவிச்சந்திரன். விவசாயமே இவருக்கு பிரதானம். காவிரியில் இருந்து தண்ணீர் வராததால், வறண்டு கிடந்த தன் வயலில் புதிய முறையை பயன்படுத்தி விவசாயம் செய்யும் முறை இவருக்கு தோன்றியது. 

அதன்படி சொட்டு நீர் பாசன முறையில் நெல் குறுவை சாகுபடி செய்யும் முறையை இவர் நடைமுறைக்கு கொண்டு வந்தார். இவர் ஏற்கனவே உளுந்து, பருத்தி போன்ற பயிர்களை சொட்டு நீர் பாசன முறையில் செய்து வந்தார்.  

பொதுவாக நெல் சாகுபடிக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும் என்ற கருத்து நிலவும் நிலையில் சொட்டு நீர் முறையில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதை செயல் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார் இவர். 

அரசு தோட்டக்கலை பயிர்களுக்கு மானியம் வழங்குவது போல சொட்டு நீர் பாசன முறையில் நெல் சாகுபடி செய்வோருக்கும் உரிய மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இவர் முன்வைக்கிறார்... 

விவசாயத்தில் புதுமைகளை செய்ய விரும்புவோருக்கு உரிய ஊக்கத்தை கொடுக்கும் வகையில் போதுமான உதவிகளை செய்ய வேண்டும் என்பது தான் விவசாயிகள் விடுக்கும் கோரிக்கையாக உள்ளது... 




Next Story

மேலும் செய்திகள்