7 ஆண்டுகளுக்குள், காச நோய் இல்லாத இந்தியா உருவாக்கப்படும் - பிரதமர் மோடி நம்பிக்கை
நாடு முழுவதும் 24 புதிய மருத்துவக்கல்லூரிகள் துவக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவிப்பு
நாடு முழுவதும் 24 புதிய மருத்துவக்கல்லூரிகள் துவக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில், 300 கோடி ரூபாய் முதலீட்டில், 200 படுக்கை வசதியுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை விரிவாக்கத்திற்கு அடிக்கல் நாட்டி பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளில், மத்திய அரசு, சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்றார்.
58 மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளாக தரம் உயர்த்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். இன்னும் 7 ஆண்டுகளுக்குள், காச நோய் இல்லாத இந்தியா உருவாக்கப்படும் என்றும்
பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story