"உலக அழகிப் போட்டியில் வெல்வதே எனது லட்சியம்" - அனுகீர்த்தி, மிஸ். இந்தியா

உலக அழகி பட்டத்தை வெல்வதே தனது லட்சியம் என மிஸ். இந்தியா போட்டியில் பட்டம் வென்ற திருச்சியை சேர்ந்த பெண் அனுகீர்த்தி தெரிவித்துள்ளார்.
உலக அழகிப் போட்டியில் வெல்வதே எனது லட்சியம் - அனுகீர்த்தி, மிஸ். இந்தியா
x
2018 ஆம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பட்டம் பெற்றவர் அனுகீர்த்தி. 

மாடலிங் துறையில் இருந்த இவர், இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் சொந்த ஊரான திருச்சி காட்டூருக்கு வந்திருந்தார். அப்போது எமது செய்தியாளரிடம் பேசிய அவர், இந்த வெற்றியைத் தொடர்ந்து உலக அழகிப் போட்டிக்கு தயாராகி வருவதாகவும், அதில் வெற்றி பெறுவதே தனது லட்சியம் என்றும் கூறினார். Next Story

மேலும் செய்திகள்