கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் - அடுத்த வாரம் வெளியாகும் என தகவல்
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்ட நிலையில், கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல், அடுத்த வாரம் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கால்நடை மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு மதிப்பெண் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் பலர், கால்நடை மருத்துவ படிப்பிற்கும் விண்ணப்பித்துள்ளனர். அதனால், மருத்துவ படிப்பிற்கான முதல்கட்ட கலந்தாய்வு நடந்த முடிந்தபின், கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இளநிலை கால்நடை மருத்துவ அறிவியியல் படிப்புக்கு 10 ஆயிரத்து 207 மாணாக்கர்களும், பி.டெக். படிப்புக்கு இரண்டாயிரத்து 418 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
Next Story