தென்னை மட்டை, ஓலைகளை அரைக்க புதிய இயந்திரம் - ஒரு மணிநேரத்தில் 3000 தென்னை மட்டைகள் அரைப்பு

வீணாகும் எந்த பொருளையும் வியாபாரமாக்கும் திறமையும், பயன்படுத்த முடியாத கழிவுகளை கூட மதிப்பு மிக்க உரமாக்கும் மாற்றும் அனுபவ அறிவும் விவசாயிகளின் வெற்றிக்கு மூலதனமாக உள்ளது. அதுதொடர்பான செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
தென்னை மட்டை, ஓலைகளை அரைக்க புதிய இயந்திரம் - ஒரு மணிநேரத்தில் 3000 தென்னை மட்டைகள் அரைப்பு
x
நாமக்கல் மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னை மட்டை, தேங்காய் பாலை ஆகியவை வயல்களில் தீயிட்டு எரிக்கப்பட்டு வந்தன. 

ஆனால் தற்போது வீணாகும் தென்னை ஓலை, மட்டை ஆகியவற்றை இயந்திரத்தின் மூலம் அரைத்து அதை தென்னை மரத்துக்கு உரமாக பயப்படுத்தப்படுகிறது.  

இந்த மரக்கழிவுகள் தென்னை மரத்தை சுற்றி பரப்பப்படும் போது மண்ணின் ஈரப்பதம் பல மாதங்களுக்கு தக்க வைக்கப்படுகிறது. இதனால் வறட்சி காலத்திலும்  தென்னையில் பூ, பிஞ்சு உதிராமல் பாதுகாக்கப்பட்டு அதிக மகசூல் கிடைக்கிறது. தென்னையை தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தப்படுவதாக விவசாயிகள்​ தெரிவிக்கின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்