சென்னை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் முழுவதும் கண்காணிப்பு கேமிரா...

குற்றச் சம்பவங்களை குறைக்க நடவடிக்கை முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள்
சென்னை, திருச்சி  உள்ளிட்ட முக்கிய நகரங்கள் முழுவதும் கண்காணிப்பு கேமிரா...
x
சென்னை - அண்ணாநகரில் சிசிடிவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாநகர காவல் ஆணையர் விசுவநாதன் கலந்து கொண்டார். சிசிடிவியின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், 85 கோடி ரூபாய் செலவில் சென்னையின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். 


இதேபோல் திருச்சியில் உள்ள முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.இது குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது திருச்சி மாநகர காவல் ஆணையர்,திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி,சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.அதில் பேசிய மாவட்ட ஆணையர் நிறுவனங்கள் மட்டுமின்றி வீடுகளிலும் கேமராக்களை சாலைகள் நோக்கி அமைத்து அவற்றை காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைப்பதன் மூலம் குற்றசம்பவங்களை தடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.

இதேபோல்  கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஏடிஎம் எந்திரங்களில், கொள்ளையர்கள் எப்படி  ஸ்கிம்மர் கருவி மற்றும் நுண்ணிய கேமரா பொருத்துகின்றனர் என்பது குறித்த இந்த கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. பாதுகாப்பு வசதிகளை பயன்படுத்துவது குறித்த வங்கி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.ஒவ்வொரு ஏடிஎம் கருவியையும் சரியாக கண்காணிக்க வேண்டும் உள்பட பல்வேறு பாதுகாப்பு விஷயங்கள் குறித்து வங்கி அதிகாரிகளுக்கு காவல்துறை அதிகாரிகள்
விளக்கம் அளித்தனர்.Next Story

மேலும் செய்திகள்