இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியீடு

2016-ல் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்
இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியீடு
x
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியில் ஊடுருவி சென்று இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள  பயங்கரவாத முகாம்கள்  தரைமட்டமாக்கப்பட்டன. ஆனால் தாக்குதல் நடத்தப்படவில்லை என பாகிஸ்தான் மறுத்து வந்தது. சர்ஜிகல் தாக்குதல் தொடர்பான வீடியோ ஆதாரங்களை வெளியிட எதிர்கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் சர்ஜிகல் தாக்குதல் தொடர்பான வீடியோ பதிவுகள் வெளியாகியுள்ளன. அதில் தீவிரவாத முகாம்கள் வெடித்து சிதறும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்திய வீரர்கள் தலைக்கவசம் மற்றும் ஆளில்லா உளவு விமானம் மூலம் இந்த காட்சிகளை படமாக்கி இருக்கலாம் என தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்