சென்னையில் ஆப்பிள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

விபத்தால் அந்த பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் ஆப்பிள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
x
சென்னை துறைமுகத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு ஆப்பிள்களை ஏற்றி வந்த கண்டெய்ணர் லாரி கோயம்பேடு மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரியை மீட்டனர். இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தால் அந்த பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்