கிராமப்புறங்களில் கிடைக்கும் வறட்டியை இனி ஆன்லைனிலும் வாங்கலாம்
ஆன்லைனில் விற்கப்படும் 'வறட்டி' பெருநகர மக்களின் தேவையை பூர்த்தி செய்ய ஆன்லைனிலும் வாங்கலாம்.
மாட்டு சாணத்தை காய வைத்து தயாரிக்கப்படும் வறட்டி, ஹோமம், உள்ளிட்ட புனித காரியங்களுக்கு பயன்படுகிறது.
கிராமங்களில் எளிதாக கிடைக்கும் வறட்டி, சென்னை போன்ற பெருநகரங்களில் கிடைப்பது கடினம்.
ஆனால், தற்போது அந்த நிலை மாறியுள்ளது. இனி வறட்டியை ஆன்லைனில் வாங்க முடியும்.
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், வறட்டியை விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.
குறைந்த பட்சமாக 9 வறட்டி, 199 ரூபாய்க்கு அமேசானில் விற்கப்படுகிறது.
Next Story