"பொதுத்துறை வங்கிகளில் தான் 85% மோசடிகள்" - வங்கி மோசடிகள் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை

இந்தியாவில் நடைபெறும் வங்கி மோசடிகளில் 85 சதவிதம் பொதுத்துறை வங்கிகள் தான் நடைபெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் தான் 85% மோசடிகள் - வங்கி மோசடிகள் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை
x
பொருளாதார நிலை தன்மை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பொதுத்துறை வங்கிகளில் மோசடி நடந்திருப்பதாக 6 ஆயிரத்து 500 மோசடி வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த வழக்குகளில் இது 85 சதவிதம் என்றும், இந்த 6 ஆயிரத்து 500  வழக்கிலும், 30 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டில் மட்டும், வங்கி மோசடிகளால் 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பெரும்பாலான மோசடிகள் கடன் பெற்று அதை வேண்டுமென்றே திரும்ப செலுத்தால் விடுவதால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்