பாவ மன்னிப்பு கேட்க சென்ற பெண் கூட்டு பலாத்காரம் - 5 பாதிரியார்கள் கொடூரம்

திருமணத்திற்கு முன்பு பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், அதற்காக பாவ மன்னிப்பு கேட்கப் போக, பாதிரியார்களால் அந்தப் பெண் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாவ மன்னிப்பு கேட்க சென்ற பெண் கூட்டு பலாத்காரம் - 5 பாதிரியார்கள் கொடூரம்
x
கேரள மாநிலம் மல்லப்பள்ளி அருகே உள்ள ஆனிக்காடு பகுதியை சேர்ந்தவர் ராய்... இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். துபாயில் வேலை பார்த்து வந்த இவர், அவ்வபோது கேரளாவில் இருக்கும் தன் மனைவிக்கு பணம் அனுப்பி வந்துள்ளார். ராயின் மனைவி,  திருமணத்திற்கு முன்பாகவே தனது உறவினரான பாதிரியார் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தன்  கணவருக்கு துரோகம் இழைத்து விட்டதாக எண்ணிய அவர், மலங்கரையை அடுத்துள்ள தேவாலயம் ஒன்றுக்கு பாவமன்னிப்பு கேட்க சென்றுள்ளார். அங்கு நடந்த சம்பவங்களை விவரித்து பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்க, பாவமன்னிப்பு அளிக்க வேண்டிய பாதிரியாரும் அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், தனக்கு இணங்க மறுத்தால் உன் கணவரிடம் திருமணத்துக்கு முன்பான உன்  வாழ்க்கை சம்பவத்தைக் கூறிவிடுவேன் என்று மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். அதை விடியோவாகவும் பதிவு செய்ததாகத் தெரிகிறது. 

அந்தப் பெண்ணுக்கு அடுத்த கொடுமையும் காத்திருந்தது. தான் எடுத்த படக்காட்சிகளை சக பாதிரியார்களுக்கு காண்பிக்க, அவர்களும், அந்தப் பெண்ணை அடைய முயற்சித்துள்ளனர். எர்ணாகுளத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு அந்தப் பெண்ணை வரவழைத்த அவர்கள் கூட்டு பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. கூடவே நட்சத்திர ஓட்டலுக்கான தொகையையும் அந்தபெ பெண்ணையே செலுத்தச் சொல்லியிருக்கிறாரகள். தன் கணவர் கொடுத்துச் சென்ற கிரெடிட் கார்டில் பணத்தைச் செலுத்த, அதற்க்கான குறுந்தகவல் ராயின் செல்ஃபோனுக்குச் செல்ல விஷயம் வெளியில் வந்துள்ளது. ஊருக்குத் திரும்பிய ராய் மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்திருக்கிறார். கணவரிடம் அந்தப் பெண் தனக்கு நடந்த கொடுமைகளை கூற, சம்பந்தபட்ட பாதிரியார்கள் மீது ராய் புகார் கொடுத்திருக்கிறார். பாவ மன்னிப்பு கேட்க சென்ற  பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை கேரளாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்