இந்தியாவில் உள்ள தொழிலதிபர்களின் ஒரு மணி நேர வருமானம் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள், பெரு நிறுவனங்களின் தலைவர்கள் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு ரூபாய் சம்பாதிக்கிறார்கள் தெரியுமா?
இந்தியாவில் உள்ள தொழிலதிபர்களின் ஒரு மணி நேர வருமானம் எவ்வளவு தெரியுமா?
x
தொழிலதிபர்கள் எல்லாம், அவர்களது வருமானத்தை நிமிட கணக்கில் கணக்கிடுவதை பார்த்திருப்போம்.. அதாவது, ஒரு நிமிடத்திற்கு இவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா என்று படங்களில் கூட பார்த்திருப்போம்.. உண்மையில், இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள், ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் தெரியுமா? ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் ஒரு மணி நேர வருமானம் 17 ஆயிரத்து 333 ரூபாய்.. இதை விட அதிக வருமானம் பெருபவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்...

முகேஷ் அம்பானியின் தலைமையில் வேலை பார்க்கும், ரிலையன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் நிகில் மெஸ்வானியின் சம்பளம் முகேஷ் அம்பானியை விட அதிகம். ஒரு மணி நேரத்திற்கு 23 ஆயிரத்து 136 ரூபாய். L&T நிறுவனத்தின் தலைவர் நாயக், ஒரு மணி நேரத்திற்கு 48 ஆயிரத்து 460 ரூபாய் சம்பாதிக்கிறார். ஐடிசி நிறுவன தலைவர் தேவேஷ்வரின் ஒரு மணி நேர வருமானம் 24 ஆயிரத்து 502 ரூபாய்.ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் ஒரு மணி நேரத்திற்கு 34 ஆயிரத்து 884 ரூபாய் வருமானம் பெறுகிறார்.

பஜாஜ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ராஜிவ் பஜாஜ் ஒரு மணி நேரத்திற்கு 32 ஆயிரத்து 777 ரூபாய் சம்பாதிக்கிறார்.ஹீரோ மோடோ கார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சாலின் ஒரு மணி நேர வருமானம் 69 ஆயிரத்து 50 ரூபாய்.ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் மேலாண் அதிகாரி சஞ்ஞீவ் மேத்தா ஒரு மணி நேரத்திற்கு 22 ஆயிரத்து 418 ரூபாய் சம்பாதிக்கிறார்..


Next Story

மேலும் செய்திகள்