பொறியியல் படிப்பு தரவரிசை இன்று வெளியீடு
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல், இன்று வெளியாகிறது.
பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்து, சான்றிதழ் சரி பார்ப்பில் பங்கேற்ற 1 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று காலை 8.30 மணிக்கு வெளியாகிறது. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், தர வரிசை பட்டியலை வெளியிடுகிறார்.
இதேபோல, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியலும் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது. மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிடுகிறார்
Next Story