வேலூர் மாவட்டத்தில் 100 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்தவர் கைது

கலர் ஜெராக்ஸ் மிஷினில் 100 ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்துள்ளார்
வேலூர் மாவட்டத்தில் 100 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்தவர் கைது
x
வேலூர் மாவட்டத்தில் 100 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்தவரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் அடுத்த பூங்குளம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர், வீட்டில் உள்ள கலர் ஜெராக்ஸ் மிஷினில் 100 ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்துள்ளார். இதனை அறிந்த சிலர் திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு கொடுத்த தகவலை அடுத்து அங்கு வந்த போலீசார், ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு இருந்த ரமேஷை கைது செய்தனர். கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடும் முயற்சியில் இருந்த அவரிடமிருந்து ஜெராக்ஸ் மிஷினும், ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்