பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

இணையதளத்தில், தரவரிசைப் பட்டியல் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்
பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு
x
* பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்து, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 1 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் நாளை காலை 8.30 மணிக்கு, வெளியிடப்படுகிறது.

* அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், தர வரிசை பட்டியலை வெளியிடுகிறார். ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும் கலந்தாய்வின் அட்டவணையும் நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* மாணவர்கள் அனைவரும், இணையதளத்தில் தங்களுடைய தரவரிசை விபரங்களை உடனடியாக அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* இதேபோல, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியலும் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. 

* சென்னை, ஓமந்துாரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள சிறப்பு மருத்துவமனையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தர வரிசை பட்டியலை வெளியிடுகிறார்.


Next Story

மேலும் செய்திகள்