இலங்கையில் இருந்து வந்த மர்ம நபர்கள் - போலீசாரை கண்டவுடன் ஒருவர் தப்பி ஓட்டம்

மற்றொருவரை கைது செய்து போலீசார் விசாரணை
இலங்கையில் இருந்து வந்த மர்ம நபர்கள் - போலீசாரை கண்டவுடன் ஒருவர் தப்பி ஓட்டம்
x
ராமநாதபுரத்திற்கு இலங்கையில் இருந்து ம‌ர்ம நபர்கள் வரவுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு போலீசார், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.நேற்று இரவு ராமநாதபுரம், உச்சிப்புளி அருகே லங்காபுரி கடற்கரைக்கு  படகில் வந்த இருவரை போலீசார் பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டவுடன் ஒருவர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இலங்கையின் மன்னார் பகுதியை சேர்ந்த சகாயபஸ்தின் என்பவர் மட்டும் போலீசார் வசம் சிக்கியுள்ளார். அவரை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்