சென்னை அழைத்து வரப்படுகிறார் நிர்மலா தேவி

குரல் மாதிரி பரிசோதனைக்காக பேராசிரியை நிர்மலா தேவியை, சிபிசிஐடி போலீசார் சென்னை அழைத்து வர உள்ளனர்
சென்னை அழைத்து வரப்படுகிறார் நிர்மலா தேவி
x
கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவிக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து, நிர்மலாதேவியை இன்று சென்னைக்கு அழைத்து வர சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் நாளை அவருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட உள்ளது.  நாளை மறுதினம், நிர்மலா தேவி மீண்டும் மதுரை சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்